Monday, September 27, 2010

உலக பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலைப்பற்றி என்னுடைய பார்வை.

உலகப்பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாங்குமூலம் என்ற நூலை தற்செயலாக படிக்க நேர்ந்தது. படிக்க படிக்க சுவாரசியமாகவும்,இரண்டு,மூன்று தலைப்புகளை கடந்து செல்லும்போது கோபமாகவும்,மனது கொதித்து எழுகிறது.


அப்படி ஒரு கொடுமையான சம்பவங்கள்,மனசாட்சியை அடகுவைத்து செய்யும் வேலைகளும் எண்ணி பார்க்கும்போது, முதலாளித்துவமும் அதன் சுரண்டல் முறையும்,அது செய்யும் வளர்ச்சி என்கிற எல்லாமே வித்தைகள் தான் என்பதை ஒரு பொருளாதர அடியாளே ஒத்துக்கொண்டு எழுதி இருக்கிறார் என்றால் முதலாளித்துவதின் உச்சமான ஏகாதிபத்தின் தன்மைகள் மனிதர்களை அடிமைகளாகவும்,இயந்திரமாகவும்,இந்த பூழிக்கே வேட்டு வைக்கிற வேலையை  செய்கிறது தெளிவுப்படுத்துகிறது.  அமெரிக்கா என்ற முதலாளித்துவ நாடு, தன்னை ஏகாதிபத்தியமாக வளர்த்துக்கொள்ளவும்,கம்யுனிசத்தை வீழ்த்த அது செய்த சதிகளையும்,தீவிரவாதத்தை அது வளர்த்துவரும் முறையையும், ஒரு நாட்டுக்கு உதவுகிறோம் என்கிற போர்வையில் அந்த நாட்டு சட்டத்திட்டங்களையும் வெளி உறவுக்கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி அந்த நாட்டை கொள்ளையடிப்பதும் மட்டும் செய்யாமல்,அந்த நாட்டின் பொருளாதாரமே தங்களை நம்பி இருக்கும்மாறு செய்து பொருளாதாரரீதியில் அடிமைப்படுத்துவதும்,அதற்கு ஆதரவாக ,உலக வங்கி,உலக வர்த்தக நிறுவனம்,ஐ.எம்.ஃப் போன்றவையும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதும்,ஊடகங்களான செய்திதாள்கள்,தொலைக்காட்சிகள் எல்லாமே அவர்களின் கொள்ளைக்கு துணைப்போவதும் அப்பட்டமாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் ஜான் பெர்க்கின்ஸ்.



இன்று நமது நாட்டில் நடந்து வரும் சிவப்பு தீவிரவாதம்,பச்சை வேட்டை என்கிற போர்வையில் அங்கு இருக்கும் கனிம வளங்களை சூரையாடுவதற்காகவும்,கொள்ளையடிப்பதற்காகவும் மலைவாழ் மக்களையும்,பழங்குடிகளின் மீது இந்த பயங்கரவாத அரசு தொடுத்திருக்கும் போர் யாருக்கு ஆதரவாக உள்ளது என்பது நன்றாகவே புரிகிறது. பழங்குடிகளின் வாழ்க்கையை உயர்த்த வழிசெய்யாத இந்த பாசிச அரசு, அங்கு கனிம வளங்கள் உள்ளது என்று தெரிந்தவுடன் அவர்களை,அவர்களின்  நிலங்களில் இருந்தும்,காடுகளில் இருந்தும் விரட்டுவதற்காக பன்னாட்டு,உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த போரை தொடுத்து இருக்கிறது. இந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலக  பழங்குடிமக்களின் மீதும்,ஏழைமக்களின் மீதும் தொடுத்து இருக்கும் போரின் தொடர்ச்சி தான் இந்த யுத்தம் என்று உணரும் போது இதயமே படபட வைக்கிறது. நாமெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோமே என்று நினைக்கும் போது தலைகுனிவாக இருக்கிறது.மேலும் அமெரிக்க தங்களுக்கு பணியாத நாடுகளின் தலைவர்களை திட்டமிட்டு கொலைசெய்வது,ஆட்சியை கவிழ்ப்பதுமான அதன் லாப வெறியும் ஆதிக்க நிலையும் புரிகிறது.கண்டிப்பாக எல்லோரும் இந்த நூலை படிக்கவேண்டும்.முதலாளித்துவம் மனித இனத்தை எதை நோக்கி செலுத்திக்கொண்டு இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள இந்த நூல் வழிவகுக்கும்.

1 comment:

குருத்து said...

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.