Tuesday, September 25, 2012

அம்பேத்காரும், சாதி இந்து மாக்சியமும்

“ சுதந்திரம் என்பதே குறிக்கோள் என்றால் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது கொண்டிருக்கிற ஆளுமையை அழிப்பதே சுதந்திரத்தின் பொருள் என்றால், மிக எளிதாக நமக்குத் தெரிய வருவது என்ன?
பொருளாதார சீர்திருத்தம் மட்டுமே நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரே சீர்திருத்

தம் என்று வலியுறுத்ட முடியாது என்பதே ஆகும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு குறிபிட்ட சமுகத்தில், அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அடிப்படைகளாக சமுதாயமும் மதமும் இருந்தால், அந்தக் கட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம், சமுதாய சீர்திருத்தமும், மதச் சீர்திருத்தமுமே ஆகும்.

------- டாக்டர் அம்மேத்கார்

” எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ, அங்கெல்லாம் அது நிலப்பிரபுத்துவ உறவுகள், தந்தைவழிச் சமுதாய உறவுகள், கிராமத்தன்மையிலான பாரம்பரிய உறவுகள் அனைத்துக்கும் முடிவு கட்டியது. மனிதனை “ இயற்கையாகவே மேலானோருக்கு” கீழ்ப்படுத்திக்கட்டிப் போட்ட பல்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி கிழித்தெறிந்தது. மதப்போதகரையும், புரோகிதரையும்,தன்னுடைய கூலி உழைப்பாளியாக மாற்றியது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான தன்னலத்தை தவிர பரிவு உணர்ச்சி இல்லாத பணத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை என்றாக்கியது.”

------ கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

“பண்டைய உலகு அதன் அந்திமக் காலத்தை நெருங்கி கொண்டிருந்த போது பண்டைய சமயங்களை கிறிஸ்துவ சமயம் வெற்றி கொண்டது. பிறகு 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமயச் கருத்துகள் அறிவொளி இயக்கக் கருத்துகளுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்ற போது அக்காலத்திய புரட்சி வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் தனது மரணப் போராட்ட த்தை நடத்திக் கொண்டிருந்தது.”
------ கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.


அம்பேத்கார் மேலே குறிய கருத்துகள் 1936ம் ஆண்டு கூறியவை. இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் சமுக பொருளாதாரம் என்ன நிலையில் இருந்தது என்று கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராயவேண்டும். அன்றைய காலத்தில் பாட்டாளி வர்க்கம் என்ற உணர்வே உழைக்கும் எந்த ஒரு தொழிலாளியிடத்தில் காணமுடியாது. அவன் சாதிரிதியாக பிரிந்துக்கிடந்தான். அதற்கு காரணம் பார்ப்பன மத சித்தாந்தமே தானே தவிர வேறு ஏதும் கிடையாது என்பது தெளிவு. இந்த மாதிரியான காலகட்டங்களை நீங்கள் தொழில்துறையில் முன்னேற்றம் காணாமல் இருந்த பண்டைய ஐரோப்பாவில் பார்க்கலாம். அதனால் தான் அம்பேத்கர் இந்தியாவை போன்று விளக்குவதற்கு எடுத்துக்காட்டுகளை காட்ட பழைய மத அடிப்படைவாத அரசுகளையும்,ரோம் அரசுக்களையும், கத்தோலிக்க – புரோட்டஸ்டாண்ட் மத மக்களின் பிரசனைகளியுமே காட்ட முற்பட்டார். இதற்கு காரணம் இந்தியா இன்னும் பழைய அடிமை சமுகத்தில் உள்ளது என்பதுதான் பொருள்.(அடிமைச்சமுகத்தில்கூட அடிமையை எஜமான் தொட்டு அடிப்பான். ஆனால் பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கிவைத்த நாடு அல்லவா நமது இந்தியா). இது போல உள்ள ஒரு அடிமைச்சமுகத்தில் காரல்மார்க்ஸ் பிறந்து இருந்தால் கண்டிபாக பொருளாதாரத்தில்(உற்பத்தி கருவிகளில் வளர்ச்சியடையாத) வளர்ச்சியடையாத சமுகத்தில் சோசியலிச கருத்துக்களை அவர் கூறி இருக்கவே மாட்டார். நவீன கருவிகளின் கண்டுபிடிப்பு, உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் போன்றவையின் வெளிபாடுதான், கட்டுப்பாடாக இருந்த கடவுள்,மதம்,சடங்கு, சம்பிரதாயங்கள்,கலாச்சாரங்கள் போன்றவையை உடைத்து பணத்திற்க்காக எல்லாவற்றையும் அடிப்பணியவைத்தது. இந்த முன்னேற்றத்தின் வெளிபாடு கருத்து,சிந்தனை தானே மார்க்சை பொருள் முதல் வாதத்தில் கொண்டு சேர்த்தது. ஆனால் எந்தவித வளர்ச்சியும் இல்லாத இந்தியாவில் மார்க்சியத்தை கொண்டு அதுவும் சாதியை ஒழிப்பதில் தவிர்த்து புரட்சி செய்வது ஒடுக்கப்படும் வர்க்கமான அன்றைய தலீத்துக்களுக்கு செய்த துரோகமாகவே நினைக்கத் தோன்றுகிறது. இது தான் சாதி இந்துக்களின் மார்க்சியமாகவே இருக்கிறது.