Monday, March 21, 2011

அரசு - நூல் அறிமுகம்


அரசு என்ற இந்த நூல் யா.மி.ஸ்வேர்திலோவ் பல்கலைக்கழகத்தில் கி.பி.1919 
சூன் 11 இல் வி.இ.லெனின் ஆற்றிய விரியுரை ஆகும்.

இன்றைய சூழலில் அரசுக்களைப்பற்றிய பேச்சுக்கள் மக்கள் மனதில் ஒருவிவாதத்தையே நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது. நமது இந்தியாவில் இன்று எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அது அரசு அரசாங்கம்,அரசின் கட்டுப்பாட்டில் தனியாக இயங்கும் நிறுவனம் என்று எல்லாவிடத்திலும் தலைவிரித்து ஆடுகிறது.
 அரசின் கொள்கையே தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் என்றும்,வாணிபச்சுதந்திரமே மனித சுதந்திரம் என்று சொல்லும் நிலைக்கு தாழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் பெரும்பான்மையான மக்கள் அல்லல் பட்டுக்கொண்டு, தினம்தினம் மரணத்துடன் மோதி இறந்துக்கொண்டு இருக்கிறார்கள்.அன்றைய 1947ஆம் ஆண்டுடில் இருந்து இன்று 2011 வரை இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.மற்றொருபக்கம் மிக சிறுபான்மையாக இருக்கும் பணக்காரர்களின் சொத்தும்,செல்வமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு கழிவு வேலை செய்வதற்கே ஒரு குறிப்பிட்ட உயர் மத்தியதரவர்க்கம் செயல்படுகிறது. இவர்களின் வளர்ச்சியை வைத்தே இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது இந்திய அரசின் புள்ளிவிவரங்கள்.




        இந்நிலையில் அரசு என்பதனைப்பற்றியும்,அதன் முரண்பட்ட செயல்பாடுகளைப்பற்றி தெரிந்துக்கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

        அரசு என்பது என்ன? வரலாற்றில் அரசு எங்கு தோன்றியது? அதன் செயல்கள் என்ன? இந்த அரசு இயந்திரத்தை இயக்குபவர்கள் யார்? அரசு என்பது எல்லா மக்களின் நலன்களை பிரதிபளிக்கக்கூடியதா? என்பவனைப்பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும்படியாக அரசு என்கின்ற இந்த சிறிய நூல் உதவுகிறது.

இந்த நூலில் இருந்து சில நல்ல வாக்கியங்களை இங்கு பதிக்கிறேன்.

“அரசு என்பது பற்றிய பிரச்சனை மிகமிக சிக்கலும் கடினமான ஒன்று; முதலாளித்துவ அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,தத்துவஞானிகளால் ஒரு வேளை மற்றப்பிரச்சனையையும் விட மிகுதியாகக்குழப்பி விடப்பட்ட ஒன்றாகும்”

“ஆளுவதை மட்டுமே தொழிலாகக்கொண்ட ஒரு தனிப்பிரிவினர் தோன்றும் பொழுது,பிறருடைய சித்தத்தைக்கட்டாயப்படுத்துவதற்கும்,கீழ்ப்படுத்துவதற்குமான தனி இயந்திரம் சிறைசாலைகள் தனிப்பட்ட படைபிரிவுகள்,இராணுவம் முதலியவை அவர்களுக்குத்தேவைப்படும் பொழுது, அரசு என்பது தோன்றியது.”

“ஆதி சமுகம் அரசே இல்லாத சமுகம். ஏன்னென்றால் அங்கு வர்க்கங்கள் இல்லை.அதாவது சுரண்டுபவர்கள் இல்லை.”

“எல்லோருக்கும் ஜனநாயகம், எல்லோருக்கும் சுதந்திரம் என்பதே ஒரு பொய்.”

“நிலத்திலும் உற்பத்திச்சாதனத்திலும் தனிச்சொத்து நிலவும் ஒவ்வொர் அரசும், மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் ஒவ்வோர் அரசும், எவ்வளவுதான் ஜனநாயகத்தன்னை உடையதாக இருப்பினும், அது முதலாளித்துவ அரசேயாகும்.”

“மூலதனத்தின் பலம்தான் எல்லாம். பங்கு மார்க்கெட்டுதான் எல்லாம். நாடாளுமன்றமும்,தேர்தல்களும் வெறும் கண்துடைப்பு கைப்பாவையாகும்.”

இந்த சிறிய நூல் கிடைக்கும் இடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 - 2841 2367

2 comments:

Anonymous said...

கண்டிப்பாக படிக்கிறேன்.

தமிழன் said...

நல்ல நூல் அறிமுகம் செய்துள்ளீர்கள்