அம்பேத்கர் திரைப்படம்.இது வெளியாவதற்கே பல பிரச்சனைகள் ஏற்பட்டு,பல நல்ல உள்ளங்களினாலும், நீதிமன்றத்தின் தலையீட்டினாலும் வெளிவந்தது.சரி நாம் கண்டிப்பாக தியேட்டருக்குப்போய் பார்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்து. நானும்,என் நண்பனும் ஞாயிறு நண்பகல் காட்சியாக உதயம் வளாகத்திற்கு சென்றேன்.டிக்கெட் எடுத்து உள்ளே சென்று உட்காந்தோம்.
தொடக்ககாட்சியே உள்ளத்தை தொடுவது மாதிரி இருந்தது."உலகத்திலேயே எந்த இனமும் அனுபவிக்காத ஒரு கொடுமையை இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற மக்கள் அனுபவிக்கிறார்கள் என்று தொடங்கியது படம்". அம்பேத்காரின் வாழ்க்கையினை நான் நூல்களின் மூலமாக படித்துள்ளேன்.அதை திரைப்படமாக எடுத்திருப்பது திருப்தி அளிக்கிறது என்றே சொல்வேன்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும்,பெண்களுக்காகவும் தன் சுயநலத்தை துறந்து கொடுமைகளின் ஊடே தன் போராட்டத்தை நடத்தி இருக்கிறார் என்பதை என் கண்முன்ணே காட்டியது இந்த படம்.ஒருவன் எந்த பெரியப்படிப்பு படித்தாலும் இந்தியாவில் சாதி அடிப்படையில் தான் ஒரு மனிதனை பார்த்து இருக்கிறார்கள்(இன்றும் பல இடங்களில் அப்படிதாங்க இருக்குது) என்பது நமக்கு தெரிந்தாலும், படத்தில் பார்க்கும் போது இந்திய சமுகத்தை நினைத்தாலே அருவெறுப்பாக உள்ளது. அம்பேத்கர் காந்தியுடன் உரையாடும் உடையாடல்கள் காந்தியின் சந்தர்ப்பவாத மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி என்பவர் துரோகத்தை தவிர வேறு எதையுமே செய்ததில்லை என்பதை சொல்கிறது இந்த திரைப்படம். காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே பல வேளைகளில் செயல்பட்டிருப்பது பல நூல்களில் இருந்தாலும், திரைப்படத்தில் இருப்பது,கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே என்கருத்து.காங்கிரஸ் என்ற கட்சி என்பதே உயர்சாதி கட்சியின் பிரதிநிதியாகதான் செயல்ப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
பெரியார் திரைப்படத்தில் பெரியாரின் அரசியலை எடுத்துவிட்டு எடுத்து இருந்தார்கள்.ஆனால் இந்த திரைப்படம் அந்தப்படத்தை விட எவ்வளவோ மேல் என்று தான் சொல்லவேண்டும்.
No comments:
Post a Comment