சாதிகளின்
சுயநல மனப்பான்மை:
“ நாடுகள்
எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அது போலவே பல்வேறு
சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத்
தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக இருக்கிறது. இந்தத் தன்னல
மனப்பான்மை, அனைத்துச் சாதிகளிலும் இருக்கிறது. பிராமணர்கள்(உயர் சாதி இந்துகள்)
பிராமணர் அல்லாதாருக்கு எதிராக தங்கள் சொந்த நலன்களைக் காத்துக் கொள்வதே
பிராமணர்களின் அக்கறையாக இருக்கிறது. அதுபோலவே, பிராமணர்களுக்கு எதிராக தங்கள்
சொந்த நலன்களைக் காத்துக் கொள்வதே பிராமணர்கள் அல்லாதோரின் அக்கறையாக இருக்கிறது.
எங்கெல்லாம் ஒரு கூட்டம் தனக்கென்று பிரத்தியோக நலன்களைக் கொண்டுள்ளதோ,
அங்கெல்லாம் இந்த சமூக விரோத மனப்பான்மை காணப்படும். ஆனால் இந்த இரு சாதி
இந்துக்களும் தலீத்துக்களுக்கு எதிராக மட்டும் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள்.
தலீத் இடஒதுக்கீடு போன்றவை பற்றி பேச்சுகள் நடைப்பெறும் போது இருவரும் சேர்ந்து
தீவிரமாக எதிர்ப்பார்கள். எனவே இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக
மட்டும் இருக்கவில்லை. தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே வாழும் பரஸ்பரம் போட்டி
மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர்.”
------ டாக்டர் அம்பேத்காரின் சாதியை
ஒழிக்கும் வழி
என்னும் நூலில் இருந்து.
நம்
மரியாதைக்குரிய மதம் எது?
“முகமதியர்கள்
ஆயுத பலத்தால் அவர்களின் மதத்தைப் பரப்புவதாக இந்துக்கள் குறைகூறுகிறார்கள். கர்த்தரை
விசுவாசிக்காதவர்களை கிறிஸ்துவர்கள் சித்திரவதை செய்வதாகவும், பணம் கொடுத்து மதம்
மாற்றுவதாகவும் இந்துக்கள் ஏளனம் செய்கிறார்கள். உண்மையில் இவர்களில் நல்ல
மதத்தினர் யார்? பிராமணர்கள் தாங்கள் சொர்க்கத்தை அடைய விரும்பி, விருப்பம்
இல்லாத, அடைய முடியாத பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி,
அவர்களை முட்டாள்களாக மாற்றி கட்டாயப்படுத்தி அழைத்து செல்ல நினைக்கிற
பார்ப்பனர்கள் முஸ்லிகளையும், கிறிஸ்துவர்களையும் குறை சொல்வதா? அறிவு ஒளியை மற்ற
சாதியினர் அடைய முடியாதபடி மறைத்தவர்களும், அறியாமை என்னும் இருட்டறையில் மக்கள்
தொடர்ந்து முழ்கி இருக்கும்படி செய்தவர்களாகிய பார்ப்பனர்கள் முஸ்லிம்களையும்,
கிருஸ்துவர்களையும் குறை கூற என்ன தகுதி இருக்கிறது?
------
டாக்டர் அம்பேத்காரின் சாதியை ஒழிக்கும் வழி
என்னும் நூலில் இருந்து.
மதத் தொழிலை
விபச்சாரமாகும் பிராமணர்கள்(பார்ப்பனர்கள்):
“ பிராமணர்கள்
காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் பூசாரி. அழிக்கும் கடவுளான சிவனுக்கும் பூசாரி;
அன்பின் தத்துவத்தை போதிக்கும் புத்தருக்கும் பிராமணன் பூசாரியாக இருக்க முடியும்.
தினமும் மிருக ரத்த பலிகேட்டும் காளிக்கும் அவன் பூசாரியாக இருக்க முடிகிறது.
சத்ரிய கடவுளான ராமனுக்கும் அவன் பூசாரியாக இருக்க முடியும். சத்ரியரை ஒழித்துக்
கட்டுவதற்காகவே அவதாரம் எடுத்த பரசுராமனுக்கும் பூசாரி. படைப்புக் கடவுளான
பிரம்மனுக்கும் பார்ப்பனன் பூசாரியாக இருக்க முடிகிறது என்றால் வைணவத்துக்கும் –
சைவத்திற்கும் வித்திசாயம் கிடையாதா? பிராமண இந்து மதத்திற்கு எதிராக உருவான
புத்தமதத்திக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. ஒரு கொள்கையை உயர்த்தி பிடித்து அதன்
வழியில் நடப்பவன், அதற்கு எதிராக இருக்கும் மற்றொரு கொள்கையையும் ஏற்பவன்
உண்மையில் ஒரு நேர்மையான மனிதனாக இருக்க முடியுமா? முடியாது என்பதே உலக நீதி.
ஆனால் பிராமணர்கள் தங்கள் பொருளாதார நலன்களுக்காக சாஸ்திரத்திரங்களுக்கு எதிராக
சென்று தங்கள் பொருளாதார நலன்களை காத்துக்கொள்கிறார்கள். அதாவது தங்கள் பொருளாதார
நலன்கள் பாதிக்காத இடத்தில் சாஸ்திரங்களை ஏற்றுக்கடைப்பிடிக்கிறார்கள். தங்கள்
பொருளாதார, ஆதிக்கநிலைக்கு எதிராக சாஸ்திரங்கள்,புராணங்கள், வரும் போது அதை தூக்கி
எரிந்துவிடுகிறார்கள். இது தான் இவர்களின் மத விபச்சாரம். மத விபசாரம் செய்தே
தங்களை கல்வி, தொழில், அரசியல் போன்ற அனைத்து துறைகளிலும் இவர்கள் முன்னிலை
வகிப்பதற்கு காரணம்.
------ டாக்டர் அம்பேத்காரின் சாதியை ஒழிக்கும்
வழி
என்னும் நூலில் இருந்து.
நல்ல முதலாளி
இருக்க முடியுமா? அதுபோல் நல்ல இந்து இருக்கமுடியுமா?:
“தன் சக
மனிதர்களை உறவினராகவோ, சமமானவர்களாகவோ ஓர் இந்து கருதுவானா? கருதவே மாட்டான்.
உண்மையில் தன் சாதியைச் சாராத அனைவரையும் ஓர் இந்துவானவன் தன்னிலிருந்து பிரித்து
அந்நியனாகவே பார்க்கிறான். அவர்களுக்கு எதிராக எந்த விதமான சூழ்ச்சிகளையும்,
மோசடிகளையும் வெட்கமின்றி மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறான். தான் நடத்தும்
தொழிலில் கூட தன் சாதிக்காரனை மட்டுமே நம்புகிறான். ஆக உயர்ந்த இந்து – தாழ்ந்த
இந்து என்று தான் இருக்கிறது. நல்ல இந்து என்பவன் இருக்கவே முடியாது. இது அவனுடைய
சொந்த குணாம்சத்தில் உள்ள ஏதோவொரு குறைபாட்டின் காரணமாகவே அவன் அப்படியிருக்கிறான்
என்று இதற்குப் பொருளல்ல. அவன் சக மனிதர்களுடன் அவன் கொள்ளும் உறவின்
அடிப்படையில்தான் குறைபாடு உள்ளது. இந்திய சமுகத்தில் மனிதர்களுக்கிடையிலான
உறவுகள் அடிப்படையிலேயே தவறானதாக இருக்கும்போது அவர்களிடம் நல்ல அம்சங்களை என்பதே
இருக்க முடியாது.
“ஓர்
அடிமைக்கு அவனுடைய முதலாளி, சற்று மேலானவனாகவோ, மோசமானவனாகவோ இருக்கலாம். ஆனால்
நல்ல முதலாளி என்பவன் இருக்க முடியாது. ஒரு நல்ல மனிதன் முதலாளியாக இருக்க
முடியாது. அது போலவே ஒரு முதலாளி நல்ல மனிதனாக இருக்கவும் முடியாது. உயர்ந்த
சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலான உறவு முறைக்கும் இது பொருந்தும். ஒரு
தாழ்ந்த சாதிக்காரனுக்கு, ஓர் உயர் சாதிகாரன், இன்னொரு உயர் சாதிக்காரனோடு
ஒப்பிடும்போது, சற்று மேலானவனாகவோ, மோசமானவனாகவோ இருக்கலாம். ஓர் உயர் சாதிக்காரன்
தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்கு, ஒரு தாழ்ந்த சாதிகாரனை கீழ் வைத்திருக்கும்
வரை அவன் நல்லவனாக இருக்க முடியாது.
------ டாக்டர் அம்பேத்காரின் சாதியை ஒழிக்கும்
வழி
என்னும் நூலில் இருந்து.
மேலே
அம்பேத்கர் கூறிவார்த்தைகளில் இருந்து முதலாளிவர்க்கத்தை எந்த அளவிற்கு புரிந்து
வைத்து இருக்கிறார் என்று பாருங்கள். அப்படி இருக்கும்போது இந்திய மார்க்சிய,லெனினிய,மாவோக்கள்
அம்பேத்கார் சொன்ன சமத்துவம், சகோதரத்துவம் போன்ற வார்த்தைகளை முதலளித்துவ
வார்த்தைகள், முதலாளித்துவதை ஆதரித்தார் என்று அவரை சிறுமைப்படுத்துகின்றனர். இது
சாதி இந்துக்களின் கண்ணோட்டத்தில் வளர்ந்துள்ள, இன்றும்வரைக்கும் பிடித்து
இழுத்துக்கொண்டு இருக்கிற இந்துத்துவ மார்க்சியம். இந்த மார்க்சியத்தை
வைத்துக்கொண்டு போராடியதால் தான் இதுவரைக்கும் அவர்களால் புரட்சியை
சாதிக்கமுடியவில்லை. புரட்சி செய்பவர்கள் யார்? யார் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு,
எல்லாம் இழந்து நிற்கிறார்களோ, யார் துன்பங்களை தாங்கிகொள்ளமுடியாமல் கிளர்ந்து
எழுகிறார்களோ, அவர்களால் செய்துவதுதான் புரட்சி. அன்றையில் இருந்து இன்றுவரையில்
இந்திய சமுகத்தில் ஒடுக்கப்படும் வர்க்கம் என்று நீங்கள் சொன்னால் அதில் தலீத்
மக்கள் தான் பெருவாரியாக ஒடுக்கப்பட்டும், பாதிக்கப்பட்டும் வருகிறார்கள். நிலம்
அற்றவர்கள் யார் என்று சொன்னால் அது பெரும்பாலும் தலீத்துகள் தான், ஏன் எல்லா சாதி
சங்கள் கூட பேரணி, கூட்டங்கள், போராட்டங்கள் நடத்துகின்றன. அவர்கள் நடத்தும் போது
பாதுகாப்பாக இருக்கும் போலீஸ். தலீத்துகள் நடத்தும் போராட்டத்தில் மட்டும்
துப்பாக்கிகள் வெடிப்பது ஏன். இது தான் இந்து சமுகம். இங்கு இருக்கும்
மார்க்சியவாதிகள் கண்களுக்கு சாதி என்பதே பிரச்சனையாக தெரிவதில்லை. அப்படி
தெரிந்திருந்தால் அவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தில் தான் சண்டை
போட்டிருப்பார்கள். துரதிஷ்டவசமாக இந்தியாவில் மார்க்சியம் சாதி இந்துக்களின்
கையில் சிக்கி தவிக்கிறது. இந்தியாவில் படித்த அறிவாளிகள்,மார்க்சியவாதிகள்,கம்யூனிஸ்டுகள் இந்த சாதி இந்துக்களில் இருந்து வெளிவருவதால்
தான் இந்திய தேசத்திற்கு இந்த நிலை வருவதற்கு காரணம். இந்தியாவின்
மாக்சியவாதிகளே,கம்யூனிஸ்ட்டுகளே முதலில் நீங்கள் ஒரு தலீத்தாக மாறுங்கள், பிறகு
பாட்டாளியாகவும்,கம்யூனிஸ்டாகவும் உங்களை உயர்த்திக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள்
இந்தியாவில் புரட்சியின் அலைகள் ஒடுக்கப்படும் அனைத்து வர்க்கத்தின் இதயத்தில்
இருந்தும் வெளிப்படும்.
நேர்மையற்ற படித்த பிராமண வர்க்கத்தின் அயோக்கியத்தனம்:
“ தம்
பரம்பரைத் தொழிலான புரோகிதத்தைவிட்டு, வணிகத்தில் இறங்கி உள்ளதோடு, சாஸ்திரங்களால்
விலக்கப்பட்ட தொழில்களிலும் அவர்கள் இறங்கி உள்ளனர். இருந்தும் அன்றாடம் சாதியை
மீறும் பிராமணர்களில் எத்தனைபேர் சாதிக்கும்- சாஸ்திரங்களுக்கும் எதிராகப்
பேசுகிறார்கள்? ஒரு பக்கத்தில் சாஸ்திரங்களை மீறி வேறு தொழில் செய்தும், வேறு வேலை
பார்ப்பதும், அதே வேலையில் சாதியையும் சாஸ்திரங்களின் புனிதத்தையும் வெறிதனமாக ஆதரிப்பதும்
நடந்துவருகிறது. ஏன் இந்த இரட்டைப் புத்தி? ஏனென்றால் மக்கள் சாதிநுகத்தடியில்
இருந்து விடுபட்டுவிட்டால் பிராமண வர்க்கத்தின் அதிகாரத்துக்கும், அந்தஸ்துக்கும்
அந்த மக்கள் ஆபத்தாகிவிடுவார்கள் என்பதை உணர்ந்துள்ளனர். தம் சிந்தனையின் பயனை
மக்களுக்கு வழங்க மறுக்கும் இந்த படிப்பாளி வர்க்கத்தின் நேர்மையின்மை படு
அயோக்கியத்தனமாகும். மாத்யூ அர்னால்டின் வார்த்தைகளில் சொன்னால் “இந்துகள்
செத்துபோன உலகத்துக்கும், இன்னும் பிறக்க சக்தியற்ற உலகத்துக்கும் இடையில்
அல்லல்படுகிறவர்கள்” என்று கூறினார்.
துன்பத்தில் துடிக்கும் மக்கள் படித்த
அறிவாளி வர்க்கத்தின் உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் இந்த அறிவாளி
வர்க்கத்தினரோ, நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்; அல்லது மக்களுக்கு சரியானவையை
கற்றுதந்து வழிகாட்ட அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள். உண்மையாகவே நாம் ஒரு
மாபெரும் சோக நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக இருக்கிறோம். இந்த சோகத்தின் முன்னிலையில், “ஓ இந்துக்களே!
இதுதான் உங்கள் தலைவர்களின் லட்சணம் என்று அங்கலாய்க்க மட்டுமே நம்மால் முடிகிறது.
------
டாக்டர் அம்பேத்காரின் சாதியை ஒழிக்கும் வழி
என்னும் நூலில் இருந்து.
No comments:
Post a Comment