Wednesday, October 29, 2008

இந்தியாவில் வாழும் மக்களுக்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டதா? சுதந்திரம் என்பது என்ன?

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் வாங்கி 61வருடங்களாகியும்,இந்தியா வளர்ந்து வரும் நாடாகவே இருக்கிறது.உலகத்தில் உள்ள ஏழைகளிலே மூன்றில் ஒரு பங்கு ஏழைகள் இந்தியாவில் வாழ்வதாக கூறுகிறது ஒரு புள்ளியல்கணக்கீடு.ஆனால் உலகபணக்காரர்கள் வரிசையில் முதல் 20 இடங்களில் 4 இந்தியா பணக்காரர்கள் இது எப்படி நடக்கிறது. இந்தியாவில் 70சதவித மக்கள் 30ரூபாய்க்கு கீழ் ஒருநாள் வருமானம் இருப்பதாக கூறுகிறது காங்கிரஸின் புள்ளிவிவரம்.அப்படி இருக்க இன்றைக்கு அத்தியாவசியப்பொருட்களின் விலை வீண்னை தொடும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதைப்பற்றி கம்யுனிஸ்ட்டுகள், பிரதமமந்திரியிடம் முறையிட்டால்,வளர்ந்து வரும் நாடு இப்படிதான் விலைவாசி உயரும் என்று உரைக்கிறார் இந்திய பிரதமர்.அப்போது வளர்ச்சி என்பது என்ன? அது இந்தியா என்ற அரசாங்கத்தின் வருமானம் சுரண்டல் தான் வளர்ச்சியா?இல்லை முதலாளிகள் தொழிலாளர்களின் இரத்தத்தை உறுஞ்சும் வருமானம் தான் வளர்ச்சியா?சரி உண்மையில் ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கவேண்டும்? மிகவும் எளிது அது. ஒவ்வொரு குடிமக்களின் வளர்ச்சிதான் அது நாட்டின் வளர்ச்சி.ஒரு நாடு தனது அரசாங்க சேமிப்பில் எவ்வளவு இருக்கிறது என்பதை விட தனது நாட்டில் உள்ள மக்களின் அடிப்படை வசதியை பூர்த்திசெய்து  இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.அதாவது அவனது தொழிலில் நிரந்தரமாக உள்ளதா?.அவனுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கிறானா? அவனிடம் ஒழுக்கத்தை அடிப்படையாகக்கொண்ட செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கிறானா? அவன் தேசத்தின் மீது அன்பு வைத்துள்ளானா என்பதெல்லாம் அடங்குகிறது ஒருநாட்டின் வளர்ச்சி.இப்படி இல்லாமல் மக்களை வரி என்ற பெயரில் விலைவாசி உயர்வை ஏற்றிவிட்டு, அதன் மூலம் அரசாங்கத்தின் சேமிப்பை பலப்படுத்த நிலைப்பது ஒரு மிகப்பெரிய முட்டாதனத்தின் வெளிப்பாடே.இது ஒரு சர்வதிகார ஆட்சியை நோக்கி செல்லும் அரசாகவே இருக்கும். ஒரு நாட்டின் பலம் அந்த நாட்டின் இராணுவம் மற்றும் பொருளாதாரம்தான். ஆனால் மக்கள் அந்த அரசாங்கத்தால் துன்பங்களை அனுபவித்தால், அந்த அரசாங்கம் எதிரிகளால் எளிதில் விழ்த்திவிடலாம்.அது எவ்வளவு பெரிய இராணுவம் கொண்ட அரசாங்கம் இருந்தாலும் சரி,மக்களின் நன்மதிப்பைபெறாத அரசாங்கம் அழிந்தேவிடும் இதற்கு பல வரலாற்றுகளே சான்று.



சரி சுதந்திரத்திற்கு வருவோம். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.அது 1947ல் ஆகஸ்ட் 15ஆம் நாள் என்று அனைவருக்கும் தெரியும்.ஒவ்வொரு குடிமக்களிடமும் நான் கேட்பதெல்லாம்,இந்தியாவிற்கு உண்மையிலெயே சுதந்திரம் கிடைத்துவிட்டதா? சுதந்திரம் என்பது என்ன? ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம், ஒரு குடிமக்களின் அடிப்படை உரிமையே பறிக்கும் பட்சத்தில் இருக்குமாயினால் அது எப்படி சுதந்திர நாடாக இருக்கமுடியும். அப்போ ஜனநாயகம் என்பது ஓட்டுப்போடுவதுதான்.அதோடு முடிந்திவிடுகிறது அல்லவா? சட்டம் என்பது வலியவர்கள் எளியவர்களை ஒடுக்குவதற்காக போடப்படும் சூழ்ச்சியின் தந்திரம் தானா? அரசியல்வாதிகள் ஓட்டுக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் தட்டிக்கேட்டால் சட்டத்தைக்கொண்டு அடிப்பார்கள்.இதுதான் சட்டமா?
சுதந்திரம் என்பதே அடங்கி ஒடுங்கு என்பதா? அடிமையாக இரு என்பதா?
சுதந்திரம்” இதைவிட ஒரு உயிரின் அடிப்படை உரிமை எது என்றால் அது பிறப்புரிமைதான் என்னென்றால் சுதந்திரத்தைவிட இந்த பிறப்புரிமை மிகவும் அடிப்படையானது. ஒரு உயிர் இந்த உலகத்தில் பிறக்கிறது, பேசுகிறது,வளர்கிறது,கற்றுக்கொள்கிறது,கற்றுக்கொண்டதில் இருந்து தனக்கேயுள்ள குணத்தால் சிந்திக்கிறது, சிந்தித்ததில் இருந்து தன் கருத்தை இவ்வுலகிற்கு சொல்கிறது.அது உண்மையோ,பொய்யோ,அது முற்போக்கான கருத்தோ,பிற்போக்கான கருத்தோ ஆனால் அது தான் அந்த உயிரின் பிறப்புரிமை. இதை ஆன்மீகரிதில் சொல்லவேண்டும் என்றால் அது அந்த உயிரைப்படைத்த அந்த கடவுளின் வெளிப்பாடே.கடவுளின் நோக்கமே.இப்படி மனித இனத்தின் பிறப்புரிமையை தடைசெய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது. அப்படி தடைசெய்தால் அது அந்த கடவுளையே தடை செய்வதற்கான நிலைதானே. அது நாடு என்ற தேசியத்தின் அடிப்படையில் வந்தாலும் தவறுதானே.சமிப காலமாக நிகழக்கூடிய நிகழ்வுகளான,ஈழம்,விடுதலைப்புலிகள்,மாவோயிசம்,காஸ்மீர்,வட கிழக்கு பிரதேசம் பிரச்சனைகள் போன்றவற்றில் மக்களின்  கருத்துரிமையே பாதிக்கப்பட்டு தேசியம் என்ற வெறியுடன் ஒடுக்கப்படுகிறது. .இதை நம் இந்தியா என்ற உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுதான் செய்துக்கொண்டு இருக்கிறது.இது ஆங்கிலேயன் ஆட்சியைவிட மிகவும் கொடுமையான ஆட்சியாகவே எனக்கு தெரிகிறது. பல மதத்தை சார்ந்தவர்கள் வாழும் நாட்டின் சட்டங்கள் மதத்தை அடிப்படையாக கொண்டு இருக்ககூடாது.மதத்தின் சித்தாந்தங்கள் ஒருநாட்டின் சட்டங்களை விட மேலேங்கி இருக்கக்கூடாது.அப்படி இருந்தால் அது பிறப்புரிமையையே பாதிக்கும் என்பதற்கு நல்ல எடுத்துக்காடாக திகழ்கிற நாடுதான் நம் இந்தியா.

No comments: